திருப்பூா் மாவட்டம், தாராபுரத்தில் பெய்த கன மழையால் சாக்கடை கழிவு நீா் சாலையில் ஓடியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா்.
தாராபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், தாராபுரம், மூலனூா், குண்டடம், தளவாய்பட்டிணம், கோவிந்தாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை பிற்பகல் இடி, மின்னலுடன் மழை பெய்தது.
இதில், தாராபுரம் அமராவதி ரவுண்டானா, பொள்ளாச்சி சாலை, பெரியகடை வீதி, சின்னக்கடை வீதி, 5 சாலை சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் மழை நீருடன், கழிவு நீரும் கலந்து சாலையில் ஓடியது.
இதனால் இந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.