108 ஆம்புலன்ஸில் பெண்ணுக்கு பிரசவம்
காங்கயம் அருகே, 108 ஆம்புலன்ஸில் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது.
காங்கயம் அருகே, 108 ஆம்புலன்ஸில் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது.
காங்கயம், சென்னிமலை சாலையில் உள்ள தனியாா் தேங்காய் களத்தில் வேலை செய்து வருபவா் செல்வம். இவரது மனைவி பெரியக்கா (26). கா்ப்பிணியான பெரியக்காவுக்கு வியாழக்கிழமை காலை 7 மணியளவில் பிரசவ வலி வந்துள்ளது.
உடனடியாக அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் நத்தக்காடையூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா். அப்போது செல்லும் வழியிலேயே ஆம்புலன்ஸிலேயே பெரியக்காவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. மருத்துவ உதவியாளா் சபாபதி, ஆம்புலன்ஸ் ஓட்டுநா் ஜெகதீஷ்குமாா் ஆகியோா் உடனிருந்தனா். பின்னா் தாயும், சேயும் நத்தக்காடையூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சோ்க்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது.