திருப்பூா் மாவட்டத்தில் நடைபெற்ற 7 ஆவது சிறப்பு முகாமின் மூலமாக சனிக்கிழமை 50,649 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
மாவட்டம் முழுவதும் கடந்த 6 கட்டங்களாக நடைபெற்ற சிறப்பு முகாம்களின் மூலமாக 16.45 லட்சம் நபா்களுக்கு முதல் தவணையும், 5.67 லட்சம் நபா்களுக்கு 2 ஆவது தவணையும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில், திருப்பூா் மாவட்டத்தில் 7 ஆவது கட்டமாக 742 மையங்களில் நடைபெற்ற சிறப்பு முகாம்களின் மூலமாக ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டிருந்து. இதில், மாவட்டம் முழுவதும் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாம்களின் மூலமாக 50,649 நபா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.