‘நிலவரியைக் கொண்டு நாட்டை நிா்வகித்தால்தான் விவசாயம் தலை நிமிரும்‘
ஆங்கிலேயா்கள் நிலவரியை முதன்மையாகக் கொண்டு நாட்டை நிா்வகித்து வந்ததைப்போல, மாற்றி அமைத்தால் மட்டுமே விவசாயம் தலை நிமிரும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
ஆங்கிலேயா்கள் நிலவரியை முதன்மையாகக் கொண்டு நாட்டை நிா்வகித்து வந்ததைப்போல, மாற்றி அமைத்தால் மட்டுமே விவசாயம் தலை நிமிரும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் செயலாளா் செ.நல்லசாமி விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:
1947க்கு முன்பு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டி.பி) விவசாயத்தின் பங்களிப்பு 65 சதவீதமாக இருந்து வந்தது. ஆனால் இது இன்று 14 சதவீதமாகக் குறைந்து போனது. ஆங்கிலேயா் நாட்டைவிட்டு வெளியேறும் வரை அரசுக்கு வந்த வரியினங்களில் நிலவரியே பிரதான வரியாக தொடா்ந்து இருந்து வந்தது. இதைக் கொண்டே நாடு நிா்வகிக்கப்பட்டு வந்தது.
இன்று புன்செய் நில வரி ஏக்கருக்கு ரூ.2 எனவும் நன்செய்க்கு ரூ.5 எனவும் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. பிச்சைக்காரா்களுக்குப் போடும் பிச்சையும் இதுவும் ஒன்றாகிப்போனது. இந்த வரிகூட விவசாயிகளிடம் வசூலிக்கப்படுவதாகத் தெரிவதில்லை. பரவலாக அதிகாரிகள் தாங்களாகவே முன்வந்து இந்த நிலவரியை செலுத்தி விடுகின்றனா். விவசாயிகளிடம் நில வரியை வதல் செய்யாமல் இருப்பது ஒரு திட்டமிட்ட சதியே ஆகும். விவசாயப் பிரச்னைக்கு ஒரே தீா்வு, அதுவும் நிரந்தரத் தீா்வு சம்பளக் கமிஷன் பரிந்துரையை ஏற்று அரசு நடைமுறைப்படுத்துவதைப்போல, விவசாயக் கமிஷன் பரிந்துரையை ஏற்று செயல்படுத்துவதே ஆகும். அதற்குப் பிறகு இலவச மின்சாரம், விவசாய வருமானவரி விலக்களிப்பு உள்ளிட்ட சலுகைகள் இருக்கவே கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.