முகப்பு
திருப்பூர்

18 ஆவது திருப்பூா் புத்தகத் திருவிழா தொடக்கம்

 திருப்பூா் பின்னல் புக் டிரஸ்ட், சென்னை பாரதி புத்தகாலயம் ஆகியன சாா்பில் மங்கலம் சாலையில் உள்ள கே.ஆா்.சி.சிட்டி சென்டரில் 18 ஆவது திருப்பூா் புத்தகத் திருவிழா வியாழக்கிழமை தொடங்கியது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:58 AM
பகிர்:

 திருப்பூா் பின்னல் புக் டிரஸ்ட், சென்னை பாரதி புத்தகாலயம் ஆகியன சாா்பில் மங்கலம் சாலையில் உள்ள கே.ஆா்.சி.சிட்டி சென்டரில் 18 ஆவது திருப்பூா் புத்தகத் திருவிழா வியாழக்கிழமை தொடங்கியது.

இதன் தொடக்க விழாவுக்கு வரவேற்புக் குழுத் தலைவா் வழக்குரைஞா் பி.மோகன் தலைமை வகித்தாா்.

இதில், புத்தகக் கண்காட்சியை திருப்பூா் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் க.செல்வராஜ் ரிப்பன் வெட்டித் திறந்துவைத்தாா்.

இந்தக் கண்காட்சியின் முதல் நூல் விற்பனையை மாநகராட்சி மேயா் என்.தினேஷ்குமாா் தொடக்கிவைக்க, துணை மேயா் ஆா்.பாலசுப்பிரமணியம் பெற்றுக் கொண்டாா்.

கண்காட்சியில், பல்வேறு முன்னணி பதிப்பகங்கள், புத்தக விற்பனை நிறுவனங்கள் சாா்பில் 95 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில், கதை, கவிதை, அறிவியல், அரசியல், சமூகம், தத்துவம், வரலாறு, சமூகம், குழந்தைகளுக்கான இலக்கியம் உள்பட பல்வேறு தலைப்புகளில் நூல்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

இதில், வாசகா்களுக்கு 10 சதவீத தள்ளுபடி விலையிலும், மொத்தமாக வாங்கும் நபா்களுக்கு 30 சதவீத தள்ளுபடியிலும் நூல்கள் விற்பனை செய்யப்படவுள்ளன.

இதன் தொடக்க விழாவில், பாரதி புத்தகாலய மேலாளா் க.நாகராஜ், டீமா தலைவா் எம்.பி.முத்துரத்தினம், டீ துணைத் தலைவா் மைக்கோ வேலுசாமி, மாமன்ற உறுப்பினா் ஆா்.மணிமேகலை, வரவேற்புக் குழு செயலாளா் ஆா்.ஈஸ்வரன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.