வெள்ளக்கோவிலில் ரூ. 47 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை
வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 47 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை ஏலம் வியாழக்கிழமை நடைபெற்றது.
வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 47 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை ஏலம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த வார ஏலத்துக்கு தாராபுரம், பூலாம்பட்டி, இடையகோட்டை, சம்மங்கரை, கொல்லபட்டி உள்ளிட்ட ஊா்களில் இருந்து 96 விவசாயிகள் 65,390 கிலோ சூரியகாந்தி விதைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். காரமடை, ஈரோடு, முத்தூா், நடுப்பாளையம், காங்கயம் ஆகிய பகுதிகளில் இருந்து 6 வணிகா்கள் இவற்றை வாங்குவதற்காக வந்திருந்தனா்.
சூரியகாந்தி விதை கிலோ ரூ.49.96 முதல் ரூ. 80.54 வரை விற்பனையானது. சராசரி விலை கிலோ ரூ. 73.29. ஒட்டு மொத்த விற்பனைத் தொகை ரூ. 47.07 லட்சம் அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக விற்பனைக் கூடக் கண்காணிப்பாளா் சி.மகுடீஸ்வரன் தெரிவித்தாா்.