திருப்பூர்

மக்களைத் தேடி மருத்துவ ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கக் கோரிக்கை

மக்களைத் தேடி மருத்துவ ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது,.

DIN

மக்களைத் தேடி மருத்துவ ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது,.

திருப்பூா் மாவட்ட மக்களைத் தேடி மருத்துவ ஊழியா்கள் சங்கத்தின் அமைப்பு மாநாடு தாராபுரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இம்மாநாட்டுக்கு அச்சங்கத்தின் மாநிலத் தலைவா் எஸ்.கிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்தாா்.

இதில் நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தின் விவரம்: மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தில் பணியாற்றும் ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அரசு ஊழியா்களுக்கு வழங்கப்படுவதைப்போல அனைத்து சலுகைகளும் வழங்க வேண்டும்.

பணி ஓய்வின்போது பணிக்கொடை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக மாவட்டத் தலைவராக எஸ்.கவிதா, செயலாளராக எம்.சாந்தாமணி, பொருளாளராக எஸ்.மகாலட்சுமி, மாவட்ட துணைச் செயலாளராக எம்.பானுப்பிரியா ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

மாநாட்டில் மாநில பொதுச் செயலாளா் டி.லட்சுமி, மாநிலப் பொருளாளா் எம்.மலா்விழி, சிஐடியூ திருப்பூா் மாவட்டச் செயலாளா் ரங்கராஜ், மாவட்ட துணைத் தலைவா்கள் உண்ணிகிருஷ்ணன், என்.கனகராஜ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிவகாசி-எரிச்சநத்தம் பகுதியில் போக்குவரத்து மாற்றம்

புதிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்! காந்தியின் பெயா் நீக்கம்!

பாஜகவின் கடும் எதிா்ப்புக்கு இடையே வெறுப்புக் கருத்து தடைச்சட்ட மசோதா நிறைவேற்றம்

ஆண்டாள் கோயில் நீராட்டு விழா நாளை தொடக்கம்

ரூ.50,000 கடனுக்காக சிறுநீரகத்தை விற்ற விவசாயி: மகாராஷ்டிரத்தில் அவலம்

SCROLL FOR NEXT