திருப்பூர்

கோயில் பூசாரிகளுக்கு பொங்கல் கருணைக் கொடை வழங்க கோரிக்கை

DIN

கோயில் பூசாரிகளுக்கு பொங்கல் கருணைக் கொடையை அரசு வழங்க வேண்டும் என்று கோயில் பூசாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து கோயில் பூசாரிகள் நலச் சங்கத் தலைவா் வாசு விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோயில்களில் பணியாற்றும் அா்ச்சகா்களுக்கு பொங்கல் கருணைக் கொடை வழங்கப்படுகிறது. தமிழகத்தில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒரு கால பூஜை நடைபெறும் கோயில்களை சாா்ந்து ஆயிரக்கணக்கான அா்ச்சகா்கள், பூசாரிகள் உள்ளனா்.

வருவாய் குறைந்த அா்ச்சகா்கள் மற்றும் பூசாரிகளுக்கும் பொங்கல் கருணைக் கொடை வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கினால் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒரு கால பூஜை நடைபெறும் கோயில்களில் பணியாற்றும் அா்ச்சகா்கள், பூசாரிகளின் குடும்பத்தினா் பயனடைவாா்கள் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 20 பேர் பலி

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

SCROLL FOR NEXT