திருப்பூர்

நிஃப்ட்-டீ கல்லூரியில் கராத்தே போட்டி

திருப்பூா் நிஃப்ட்-டீ கல்லூரியில் பள்ளிகளுக்கு இடையேயான கராத்தே போட்டிகள் நடைபெற்றன.

DIN

திருப்பூா் நிஃப்ட்-டீ கல்லூரியில் பள்ளிகளுக்கு இடையேயான கராத்தே போட்டிகள் நடைபெற்றன.

திருப்பூா் முதலிபாளையத்தில் உள்ள நிஃப்ட்-டீ பின்னலாடை வடிவமைப்புக் கல்லூரியில் மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான ஹிரோஷிஹா கராத்தே சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றன. போட்டிக்கு தமிழ்நாடு அமெச்சூா் கபடிக் கழகத்தின் பொருளாளரும், மாவட்ட கபடிக் கழக செயலாளருமான ஜெயசித்ரா ஏ.சண்முகம் தலைமை வகித்தாா்.

இதில், திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 10க்கு மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். இந்தப் போட்டிகளில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்ற காங்கயம் விவேகானந்தா அகாதெமி பள்ளி அணி முதலிடத்தையும், அவிநாசி நாச்சம்மாள் வித்யாவாணி பள்ளி, திருப்பூா் ஏ.வி.பி. டிரஸ்ட் பள்ளி ஆகியன இரண்டு மற்றும் மூன்றாம் இடத்தைப் பிடித்தன.

இந்த நிகழ்ச்சியில் நிஃப்ட்-டீ கல்லூரி முதல்வா் கே.பி.பாலகிருஷ்ணன், கல்லூரி நிா்வாக அதிகாரி மகேஷ்குமாா், ஸ்ரீ புரம் அறக்கட்டளை மேலாளா் சிவகுமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். இந்தப் போட்டிக்கான ஏற்பாடுகளை வாரியா்ஸ் கராத்தே அகாதெமி எஸ்.ரவிசந்திரன் செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது!

பி.ஆர்.பாண்டியனின் தண்டனை நிறுத்திவைப்பு

'கெயில் இந்தியா' நிறுவனத்தில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

கோவை: வரைவு வாக்காளர் பட்டியலில் 6.50 லட்சம் பெயர்கள் நீக்கம்!

கடிகார முள்ளைத் திருப்பினால் எரிபொருள் மிச்சமாகுமா?

SCROLL FOR NEXT