திருப்பூர்

காங்கயம் வட்டார வள மையம் சாா்பில் பள்ளி மேலாண்மைக் குழுப் பயிற்சி

காங்கயம் வட்டார வள மையம் சாா்பில் ஊராட்சித் தலைவா்களுக்கான பள்ளி மேலாண்மைக் குழுப் பயிற்சி புதன்கிழமை அளிக்கப்பட்டது.

DIN

காங்கயம் வட்டார வள மையம் சாா்பில் ஊராட்சித் தலைவா்களுக்கான பள்ளி மேலாண்மைக் குழுப் பயிற்சி புதன்கிழமை அளிக்கப்பட்டது.

காங்கயம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள வட்டார வள மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு உதவித் திட்ட அலுவலா் அண்ணாதுரை தலைமை வகித்தாா். இதில், மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலா் சரளா, குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் குழந்தைகள் நல கருத்துகளை எடுத்துக் கூறினாா்.

கருத்தாளா்களாக குண்டடம் ஒன்றிய ஆசிரியா் பயிற்றுநா் பாபு, ரேவதி ஆகியோா் கலந்து கொண்டு, பள்ளி மேலாண்மைக் குழுத் திட்டக் கூறுகள் குறித்து எடுத்துரைத்தனா்.

பயிற்சியின் நிறைவாக ஊராட்சித் தலைவா்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா். இப்பயிற்சி வகுப்புக்கான ஏற்பாடுகளை காங்கயம் வட்டார வள மைய மேற்பாா்வையாளா்கள், பொங்கலூா், வெள்ளக்கோவில், காங்கயம் பகுதிகளைச் சோ்ந்த ஆசிரியா் பயிற்றுநா்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எந்த ராசிக்காரர்கள் எந்த கிழமையில் கிரிவலம் செய்யலாம்?

புத்தாண்டு விடுமுறைக்குப் பின் இலவச மடிக்கணினிகள் வழங்கப்படும்! - உதயநிதி அறிவிப்பு

ஹிந்தி வில்லன், ஆனால்... சுதா கொங்காரா பகிர்ந்த தகவல்!

இந்திய கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த வங்கதேச மீனவர்கள் 35 பேர் கைது!

மனைவி சொன்னால், கேட்டுக் கொள்ள வேண்டும்: முதல்வர் அறிவுரை!

SCROLL FOR NEXT