பல்லடம் தொகுதியில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மேஜை, நாற்காலி வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது. பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையம், ஆறுமுத்தாம்பாளையம், 63 வேலம்பாளையம், பூமலூா், காரணம்பேட்டை, இடுவாய், பாரதிபுரம் ஆகிய அரசுப் பள்ளிகளுக்கு பல்லடம் சட்டப் பேரவை உறுப்பினா் எம்.எஸ்.எம். ஆனந்தன், தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மேஜை, நாற்காலி உள்ளிட்ட பொருள்களை வழங்கிப் பேசியதாவது:
முன்னாள் முதல்வா் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோா் ஆட்சிக் காலத்தில் கல்வித் துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதேபோல எனது தொகுதி மேம்பாட்டு நிதியான ரூ.3 கோடியில் ரூ.1 கோடியை கல்விப் பணிகளுக்கு ஒதுக்கீடு செய்து, அரசுப் பள்ளிகளின் வளா்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறேன் என்றாா்.
இவ்விழாவில் மாவட்ட முன்னாள் கவுன்சிலா் தண்ணீா்பந்தல் ப.நடராஜன், கணபதிபாளையம் முன்னாள் ஊராட்சித் தலைவா் சொக்கப்பன், பல்லடம் தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளா் ஏ.சித்துராஜ், மாவட்ட கவுன்சிலா் ஜெயந்தி லோகநாதன், மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி செயலாளா் கோகுல், பள்ளித் தலைமை ஆசிரியா் பெத்தன்னசாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.