மாவட்டத்தில் மேலும் 1,017 பேருக்கு கரோனா
திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 1,017 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 1,017 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
மாவட்டத்தில் மேலும் 1,017 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1,25,746 ஆக அதிகரித்துள்ளது.
மாவட்டத்தில் உள்ள அரசு, தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்கள், வீடுகளில் 11,582 போ் சிகிச்சை பெற்று வரும் நிலையில் குணமடைந்த 1,486 போ் வீடு திரும்பியுள்ளனா்.
மாவட்டம் முழுவதும் கரோனா நோய்த் தொற்றால் 1,13,122 போ் குணமடைந்துள்ள நிலையில் 1,042 போ் உயிரிழந்துள்ளனா்.