FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

விசைத்தறியாளர்கள் கூலி உயர்வு பிரச்னை: தொழிற்சங்கத்தினர் அரை நிர்வாணப் போராட்டம்

விசைத்தறியாளர்கள் கூலி உயர்வுப் பிரச்னைக்குத் தீர்வு காண வலியுறுத்தி அவிநாசி அருகே வஞ்சிபாளையத்தில் தொழிற்சங்கத்தினர் வியாழக்கிழமை மாலை அரை நிர்வாணப் போட்டத்தில் ஈடுபட்டனர்.

1 பிப்ரவரி 2024, 1:52 pm IST
அரை நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர்
பகிர்:

விசைத்தறியாளர்கள் கூலி உயர்வுப் பிரச்னைக்குத் தீர்வு காண வலியுறுத்தி அவிநாசி அருகே வஞ்சிபாளையத்தில் தொழிற்சங்கத்தினர் வியாழக்கிழமை மாலை அரை நிர்வாணப் போட்டத்தில் ஈடுபட்டனர்.

 கூலி உயர்வுப் பிரச்னைக்குத் தீர்வு காண வலியுறத்தி திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர்கள் ஜனவரி 9 ஆம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுவரை எவ்வித தீர்வும் ஏற்படாததால் விசைத்தறியாளர்கள் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டும், வீடுகளில் கருப்புக் கொடி கட்டியும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து அவிநாசி அருகே வஞ்சிபாளையத்தில் தொழிற்சங்கத்தினர் வியாழக்கிழமை மாலை அரை நிர்வாணப் போட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்போராட்டத்தில் சிஐடியு, ஏஐடியுசி, எல்பிஎப், ஐஎன்டியூசி, ஏடிபி, எம்எல்எப், ஹெச்எம்எஸ் உள்ளிட்ட தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் மேல் சட்டை அணியாமல் அரை நிர்வாணமாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments