முகப்பு
திருப்பூர்

மறுவாழ்வு முகாமில் அடிப்படை வசதிகள் கோரி சாலை மறியிலில் ஈடுபட்ட இலங்கை அகதிகள்

காங்கயத்தில் உள்ள மறுவாழ்வு முகாமில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி இலங்கை அகதிகள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:23 AM
பகிர்:

காங்கயத்தில் உள்ள மறுவாழ்வு முகாமில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி இலங்கை அகதிகள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

காங்கயத்தில் இருந்து கரூா் செல்லும் சாலையில் இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாம் உள்ளது. இந்த முகாமில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்த முகாமில், குடிநீா், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து பல முறை புகாா் தெரிவித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த இலங்கை அகதிகள் 100க்கும் மேற்பட்டோா் கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் காலிக் குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காங்கயம் காவல் துறையினா் மறியலில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். இது தொடா்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி அகதிகள் முகாமில் அடிப்படை வசதி செய்துதர நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறையினா் உறுதியளித்தன்பேரில் அனைவரும் கலைந்து சென்றனா். இந்தப் போராட்டம் காரணமாக கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →