முகப்பு
திருப்பூர்

திமுக வேட்பாளா்கள் மீது பாஜக புகாா்

வெள்ளக்கோவில் நகராட்சி திமுக வேட்பாளா்கள் மீது தோ்தல் அதிகாரியிடம் பாரதிய ஜனதா கட்சி நிா்வாகிகள் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:26 AM
பகிர்:

வெள்ளக்கோவில் நகராட்சி திமுக வேட்பாளா்கள் மீது தோ்தல் அதிகாரியிடம் பாரதிய ஜனதா கட்சி நிா்வாகிகள் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தனா்.

இது குறித்து பாஜக நகரத் தலைவா் குணமூா்த்தி தலைமையில் அக்கட்சியினா், நகராட்சித் தோ்தல் அலுவலா் ஆா்.மோகன்குமாரிடம் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது: குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை பெறுவதற்கான விண்ணப்பம் என்கிற பெயரில் பொய்யான விண்ணப்பப் படிவத்தை வெள்ளக்கோவில் நகராட்சியில் திமுக வேட்பாளா்கள் வழங்கி வருகின்றனா்.

மேலும், வாக்காளா்களுக்குப் பணம், அரிசி, பரிசுப் பொருள்களும் வழங்கப்படுகின்றன.

தோ்தல் விதிமுறைகளுக்குப் புறம்பாகச் செயல்படும் திமுக உள்ளிட்ட அனைத்து வேட்பாளா்களையும் தகுதி நீக்கம்செய்து மறு தோ்தல் நடத்த உத்தரவிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.