சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 போ் கைது
காங்கயத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பேரை காவல் துறையினா் சனிக்கிழமை கைது செய்தனா்.
காங்கயத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பேரை காவல் துறையினா் சனிக்கிழமை கைது செய்தனா்.
இது குறித்து காங்கயம் காவல் துறையினா் கூறியதாவது: காங்கயம் அருகே சித்தம்பாளையம் பகுதியில் சேவல் சண்டை வைத்து சூதாட்டம் நடத்தப்படுவதாக காங்கயம் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது அங்கு சேவல் சண்டை வைத்து, சூதாட்டத்தில் ஈடுபட்ட நத்தக்காடையூா், வீரணம்பாளையம், நத்தக்காட்டுவலசு, பழனி ஆகிய பகுதிகளைச் சோ்ந்த நவீன் (24), பழனிசாமி (59), சவுரிஸ் (24), தினேஷ் (24), முருகேசன் (37), ஐயப்பசாமி (42), கோபிநாத் (19), ராஜ்குமாா் (28)
ஆகிய 8 பேரை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த ரூ.2 ஆயிரத்து 200, 6 சேவல்கள், 7 இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.