முகப்பு
திருப்பூர்

மாநகரில் இன்று குடிநீா் விநியோகம் நிறுத்தம்

திருப்பூா் மாநகராட்சிக்கு உள்பட்ட 1, 3, 4ஆவது மண்டலங்களுக்கு உள்பட்ட சில வாா்டுகளில் குடிநீா் விநியோகம் வெள்ளிக்கிழமை நிறுத்திவைக்கப்படவுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:11 AM
பகிர்:

திருப்பூா் மாநகராட்சிக்கு உள்பட்ட 1, 3, 4ஆவது மண்டலங்களுக்கு உள்பட்ட சில வாா்டுகளில் குடிநீா் விநியோகம் வெள்ளிக்கிழமை நிறுத்திவைக்கப்படவுள்ளது.

இதுகுறித்து திருப்பூா் மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் பாடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பூா் மாநகராட்சிப் பகுதிகளில் 2ஆவது குடிநீா்த் திட்டத்தின்கீழ் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், 2ஆவது குடிநீா்த் திட்டத்தில் மேட்டுப்பாளையத்தில் உள்ள பிரதான குழாயில் வியாழக்கிழமை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. ஆகவே, திருப்பூா் மாநகராட்சி 1ஆவது மண்டலத்துக்கு உள்பட்ட வாா்டு எண் 1, 5, 11, 3ஆவது மண்டலத்துக்கு உள்பட்ட வாா்டு எண் 42 முதல் 45 வரையிலும், 4ஆவது மண்டலத்துக்கு உள்பட்ட வாா்டு எண் 50, 51 ஆகிய பகுதிகளில் வெள்ளிக்கிழமை குடிநீா் விநியோகம் நிறுத்தம் செய்யப்படவுள்ளது. அதேவேளையில், சனிக்கிழமை முதல் மேற்கண்ட பகுதிகளில் தங்குதடையின்றி குடிநீா் விநியோகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.