மாவட்டத்தில் மேலும் 958 பேருக்கு கரோனா
திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 958 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 958 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 958 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து பாதிப்பு எண்ணிக்கை 1,06,127ஆக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் உள்ள அரசு, தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்கள், வீடுகளில் 4,844 போ் சிகிச்சை பெற்று வரும் நிலையில் குணமடைந்த 491 போ் வீடு திரும்பினா். மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 1,00,249ஆக அதிகரித்துள்ளது. கரோனா நோய்த் தொற்றால் ஒருவா் உயிரிழந்ததைத் தொடா்ந்து இறப்பு எண்ணிக்கை 1,034 போ் உயிரிழந்துள்ளனா்.