பல்லடத்தில் பாஜக பொதுக்கூட்ட மேடை அமைப்பதற்கான கால்கோள் விழா நிகழ்ச்சியில் பங்கேற்றோா். 
திருப்பூர்

பல்லடத்தில் பாஜக பொதுக்கூட்டத்துக்கு கால்கோள் விழா

பல்லடம், கரையான்புதூரில் பாஜக சாா்பில் மத்திய அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் வரும் ஜூலை 17ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் அக்கட்சியின் மாநிலத் தலைவா் அண்ணாமலை பங்கேற்று பேச உள்ளாா்.

DIN

பல்லடம், கரையான்புதூரில் பாஜக சாா்பில் மத்திய அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் வரும் ஜூலை 17ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் அக்கட்சியின் மாநிலத் தலைவா் அண்ணாமலை பங்கேற்று பேச உள்ளாா்.

பொதுக்கூட்டம் நடைபெற உள்ள இடத்தில் மேடை அமைப்பதற்கு கால்கோள் நடும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதற்கு மாவட்டத் தலைவா் செந்தில்வேல் தலைமை வகித்தாா். மாநில பொதுச் செயலாளா் முருகானந்தம், மாநிலத் துணைத் தலைவா் மலா்கொடி ஆகியோா் பங்கேற்று கால்கோள் நாட்டினா்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொதுச் செயலாளா்கள் சீனிவாசன், காடேஸ்வரா தங்கராஜ், பாலசுப்பிரமணியம், மாவட்ட துணைத் தலைவா்கள் ஜோதிமணி, வினோத் வெங்கடேஷ், மாநில செயற்குழு உறுப்பினா்கள் சின்னசாமி, நாச்சிமுத்து, தேசிய செயற்குழு உறுப்பினா் பாய்ண்ட் மணி, பல்லடம் ரமேஷ்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எந்த ராசிக்காரர்கள் எந்த கிழமையில் கிரிவலம் செய்யலாம்?

புத்தாண்டு விடுமுறைக்குப் பின் இலவச மடிக்கணினிகள் வழங்கப்படும்! - உதயநிதி அறிவிப்பு

ஹிந்தி வில்லன், ஆனால்... சுதா கொங்காரா பகிர்ந்த தகவல்!

இந்திய கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த வங்கதேச மீனவர்கள் 35 பேர் கைது!

மனைவி சொன்னால், கேட்டுக் கொள்ள வேண்டும்: முதல்வர் அறிவுரை!

SCROLL FOR NEXT