திருப்பூர்

திருப்பூரில் பக்ரீத் சிறப்புத் தொழுகை

DIN

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு திருப்பூரில் நடைபெற்ற சிறப்புத் தொழுகைகளில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் ஞாயிற்றுக்கிழமை பங்கேற்றனர்.

திருப்பூரில் இஸ்லாமியர்களின் தியாகத் திருநாளான பக்ரீத் பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருப்பூரில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் காங்கயம் சிடிசி கார்னர், பெரியபள்ளிவாசல் வீதி, நொய்யல் வீதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்ற சிறப்புத் தொழுகைகளில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். 

திருப்பூர் நொய்யல் வீதியில் உள்ள மாநகராட்சி பள்ளி மைதானத்தில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். இதன் பின்னர் சகோதரத்துவத்தை உணர்த்தும் வகையில் ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவி தங்களது மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டனர். இதைத்தொடர்ந்து, ஆடு, மாடு இறைச்சிகளை குர்பாணி கொடுத்தனர். 

இதில், இறைச்சியின் ஒரு பங்கை ஏழைகளுக்கும், ஒரு பங்கை உறவினர்களுக்கும் ஒரு பங்கை தங்களுக்கும் பிரிந்துக் கொடுத்து மகிழ்ச்சியுடன் தியாகத்திருநாளை உற்சாகமாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இம்பாக்ட் பிளேயர் விதி வெற்றிக்கு உதவியது: கேகேஆர் கேப்டன்

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

SCROLL FOR NEXT