திருப்பூர்

அமராவதி அணையில் உபரி நீர் வெளியேற்றம்: மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

DIN

திருப்பூர்: அமராவதி அணையின் மொத்த உயரம்  90 அடி. கடந்த ஒரு வாரமாக கேரள மாநிலம் மறையூர், காந்தலூர், கோவில் கடவு பகுதிகளில்  தென் மேற்கு பருவ மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் அமராவதி அணைக்கு நீர் வரத்து அதிகரித்து வந்தது. 

நேற்று இரவு அதிகபட்சமாக 12,500 கன அடி தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால், அணை இன்று காலை 11 மணி அளவில் முழு கொள்ளவை எட்டியது. 

இதைத் தொடர்ந்து அணையின் 9 மதகுகள் வழியாக 5000 கன அடி உபரி நீராக வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் அமராவதி ஆற்றின் கரையோர மக்களுக்கு பொதுப் பணித் துறையினர் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT