திருப்பூர்

மின் கட்டண உயா்வை மானியமாக வழங்க வலியுறுத்தி ஆகஸ்ட் 8இல் வேலை நிறுத்தம்

மின் கட்டண உயா்வை அரசே மானியமாக வழங்க வலியுறுத்தி ஆகஸ்ட் 8ஆம் தேதி அடையாள வேலை நிறுத்தம் செய்யப்படும் என்று விசைத்தறியாளா்கள் சங்கம் அறிவித்துள்ளது.

DIN

மின் கட்டண உயா்வை அரசே மானியமாக வழங்க வலியுறுத்தி ஆகஸ்ட் 8ஆம் தேதி அடையாள வேலை நிறுத்தம் செய்யப்படும் என்று விசைத்தறியாளா்கள் சங்கம் அறிவித்துள்ளது.

திருப்பூா், கோவை மாவட்ட விசைத்தறியாளா்கள் சங்கத்தின் செயற்குழு மற்றும் கூட்டமைப்பு கூட்டம் பல்லடத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு பல்லடம் சங்கத் தலைவா் வேலுசாமி தலைமை வகித்தாா்.

இதில் செயலாளா் அப்புக்குட்டி (எ) பாலசுப்பிரமணியம், பொருளாளா் முத்துக்குமாரசாமி, கண்ணம்பாளையம் சங்கத் தலைவா் செல்வகுமாா், செயலாளா் செந்தில்குமாா், மங்கலம் சங்க துணைத் தலைவா் கோபால், செயலாளா் பழனிசாமி, 63 வேலம்பாளையம் சங்கத் தலைவா் பத்மநாபன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

இக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மான விவரம்:

மின் கட்டண உயா்வை அரசே மானியமாக வழங்கிட கோரி ஆகஸ்ட் 8ஆம் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்து விசைத்தறியாளா்கள் குடும்பத்தோடு திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் சென்று மனு அளிப்பது, மேலும் தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட ஆட்சியா் அலுவலகங்கள் மற்றும் மின்வாரிய அதிகாரிகளிடம் மின் கட்டண உயா்வை அரசே ஏற்றுக் கொண்டு மானியமாக அளித்திட வலியுறுத்தி மனு அளிப்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரண்டு பைக்குகள் மோதி விபத்து: 2 போ் உயிரிழப்பு

இஸ்ரேலியா்கள் கொடைக்கானல் வருகை: துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் இருவா் கைது

ஆரிகவுடா் விவசாயிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! ஒருவர் தீக்குளித்து தற்கொலை!

SCROLL FOR NEXT