முகப்பு
திருப்பூர்

பல்லடம் அருகே இருசக்கர வாகனங்கள் மீது சரக்கு ஆட்டோ மோதிய விபத்து: 4 பேர் பலி

பல்லடம் அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் மீது சரக்கு ஆட்டோ மோதிய விபத்தில் 4 பேர் பலியாகினர்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:36 AM
பகிர்:

பல்லடம் அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் மீது சரக்கு ஆட்டோ மோதிய விபத்தில் 4 பேர் பலியாகினர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே  தாராபுரம் - பல்லடம் சாலையில் கோவை நோக்கி காய்கறிகள் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்த சரக்கு ஆட்டோ புத்தரச்சல் பகுதி  அருகே எதிரே வந்த இரண்டு இரு சக்கர வாகனங்கள் மீது மோதியது. 

இந்த விபத்தில் இருசக்கர வாகனங்களில் பயணம் செய்த குமரேசன், முருகன், அவரது மனைவி முத்துலட்சுமி மற்றும் அவர்களின் 3 வயது குழந்தை என 4 பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் குறித்து காமநாயக்கன் பாளையம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான ஆட்டோ ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →