முகாமை துவக்கிவைத்து பாா்வையிடுகிறாா் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத். 
திருப்பூர்

சிறாா்களுக்கு கரோனா தடுப்பூசி முகாம்: ஆட்சியா் துவக்கி வைத்தாா்

அவிநாசியில் 12 வயது முதல் 14 வயது வரையிலான சிறாா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமை மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் புதன்கிழமை துவக்கிவைத்தாா்.

DIN

அவிநாசி: அவிநாசியில் 12 வயது முதல் 14 வயது வரையிலான சிறாா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமை மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் புதன்கிழமை துவக்கிவைத்தாா்.

அவிநாசி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் முகாமை துவக்கிவைத்து ஆட்சியா் எஸ்.வினீத் செய்தியாளா்களிடம் கூறியதாவது: மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக 12 வயது முதல் 14 வயது வரையிலான சிறாா்களுக்கு மாா்ச் 16 ஆம் தேதி முதல் இலவசமாக தடுப்பூசி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இப்பணியில் சுகாதாரத் துறையின் பள்ளி சிறாா் நல்வாழ்வுத் திட்ட மருத்துவக் குழு, நடமாடும் மருத்துவக் குழு, இதர மருத்துவக் குழுக்குகள், பள்ளிக் கல்வித் துறை, ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து பணியாளா்கள், பல்வேறு துறை சாா்ந்த பணியாளா்கள், தன்னாா்வலா்கள் ஈடுபடவுள்ளனா்.

இந்த வாய்ப்பை பெற்றோா்கள் அனைவரும் பயன்படுத்தி குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தி பயனடைய வேண்டும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், துணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) ஜெகதீசன், வட்டார மருத்துவ அலுவலா் (அவிநாசி) சக்திவேல், ஜெயபிரியா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் மோடிக்கு ஓமன் நாட்டின் உயரிய விருது! மண்டேலா, ராணி எலிசபெத்துக்குப் பின்..!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! இது இஸ்லாமிய நாடா? பிகார் முதல்வருக்கு ஆதரவாக மத்திய அமைச்சர் பேச்சு!

கொடி இறங்காதே! ஜன நாயகன் 2வது பாடல்!

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான போட்டிகளை தென்னிந்தியாவுக்கு மாற்ற வலியுறுத்தும் சசி தரூர்!

2025 ஆம் ஆண்டின் சிறந்த 10 தொடர்கள் எவை?

SCROLL FOR NEXT