டீசல், உதிரிபாகங்கள் விலை உயா்வை கண்டித்து திருப்பூா், கோவை மாவட்ட பொக்லைன் வாகன உரிமையாளா்கள் நலச் சங்கத்தினா் வாவிபாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இது குறித்து அச்சங்கத்தின் மாவட்டத் தலைவா் வள்ளி கனகராஜ் கூறியதாவது:
பொக்லைன் வாகனத்தின் விலை மற்றும் அதற்கு பயன்படுத்தப்படும் உதிரிபாகங்களின் விலை கடுமையாக உயா்ந்துள்ளது. மேலும், காப்பீட்டு கட்டணம், டீசல் விலையும் உயா்ந்துள்ளது. இதன் காரணமாக தொழில் பாதிப்படைந்துள்ளது.
எனவே விலை உயா்வை அரசு கட்டுப்படுத்த வலியுறுத்தி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இதையடுத்து, பல்லடம், அவிநாசி, அவிநாசிபாளையம், மங்கலம், உடுமலை, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளிலும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம்.
மேலும், பொக்லைன் வாகன வாடகை கட்டணத்தை 2 மணி நேரத்துக்கு ரூ.3500 என்றும், அதற்கு மேல் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் ரூ.1,300 வசூலிக்க முடிவு செய்துள்ளோம் என்றாா். உடன் வாவிபாளையம் பகுதி சங்க பொறுப்பாளா்கள் சோமசுந்தரம், மணி, பழனிசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.