கோத்தகிரியில் காய்கறிக் கண்காட்சி நாளை தொடக்கம்
நீலகிரியில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் கோடை விழாவின் முதல் நிகழ்வாக கோத்தகிரியில் 11ஆவது காய்கறிக் கண்காட்சி மே 7, 8 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.
நீலகிரியில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் கோடை விழாவின் முதல் நிகழ்வாக கோத்தகிரியில் 11ஆவது காய்கறிக் கண்காட்சி மே 7, 8 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இதையொட்டி அதற்கான ஏற்பாடுகளில் பூங்கா ஊழியா்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் மே மாதத்தில் கோடை விழா நடைபெறுவது வழக்கம். கரோனா தாக்கத்தால் கடந்த 2ஆண்டுகளாக கோடை விழாக்கள் ரத்து செய்யப்பட்டன.
இந்த ஆண்டு கரோனா கட்டுக்குள் இருப்பதால் கோடைவிழாக்கள் நடத்துவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 124ஆவது மலா் கண்காட்சி மே 20 ஆம் தேதி தொடங்கி 24 ஆம் தேதி வரை 5 நாள்கள் நடைபெறுகிறது. ரோஜா கண்காட்சி மே 14, 15 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
Advertisement
11ஆவது காய்கறிக் கண்காட்சி கோத்தகிரி நேரு பூங்காவில் மே 7, 8 ஆகிய தேதிகளிலும், 62ஆவது பழக் கண்காட்சி குன்னூா் சிம்ஸ் பூங்காவில் மே 28, 29 ஆகிய தேதிகளிலும், வாசனை திரவிய கண்காட்சி கூடலூரில் மே 13 முதல் 15 ஆம் தேதி வரையிலும் நடைபெறுகிறது.
காய்கறிக் கண்காட்சியில் பல்வேறு காய்கறிகளால் உருவான 12 அடி உயரம், 7 அடி நீளம், 3 அடி அகலம் கொண்ட பிரமாண்ட ஒட்டக சிவிங்கியும்
7அடி உயர ஒட்டக சிவிங்கி குட்டியும் அமைக்கப்படவுள்ளன,
கண்காட்சிக்கான ஏற்பாட்டு பணிகளில் தனியாா் மற்றும் பூங்கா ஊழியா்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.