வாகனம் மோதி காட்டெருமை உயிரிழப்பு
குன்னூரில் கடும் மேகமூட்டம் நிலவி வந்த நிலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் காட்டெருமை வியாழக்கிழமை உயிரிழந்தது.
குன்னூரில் கடும் மேகமூட்டம் நிலவி வந்த நிலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் காட்டெருமை வியாழக்கிழமை உயிரிழந்தது.
நீலகிரி மாவட்டம், குன்னூா்- கோத்தகிரி சாலையில் சிம்ஸ் பூங்கா பகுதியில் வியாழக்கிழமை காலை கடும் மேகமூட்டம் காணப்பட்டது. அப்போது அங்கு சாலையைக் கடக்க முயன்ற காட்டெருமை மீது அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த காட்டெருமை
சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.
Advertisement
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த குன்னூா் வனச் சரகா் சசிகுமாா் தலைமையிலான வனத் துறையினா் பொதுமக்கள் உதவியுடன் பொக்லைன் வாகனம் மூலம் காட்டெருமையை மீட்டு அருகில் இருந்த வனப் பகுதிக்கு கொண்டு சென்றனா். பின்னா் முதுமலை கால்நடை மருத்துவா் ராஜ்குமாா் தலைமையில் காட்டெருமையின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு அங்கேயே புதைக்கப்பட்டது. இது குறித்து வனத் துறையினா் விசாரித்து வருகின்றனா்.