முகப்பு
திருப்பூர்

பள்ளபாளையத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கக் கோரிக்கை

 பள்ளபாளையத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி அருந்ததியா் சமுதாய மக்கள், பல்லடம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஜமாபந்தியில் கோரிக்கை மனு அளித்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:22 AM
பகிர்:

 பள்ளபாளையத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி அருந்ததியா் சமுதாய மக்கள், பல்லடம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஜமாபந்தியில் கோரிக்கை மனு அளித்தனா்.

அதில் கூறியிருப்பதாவது: பல்லடம் வட்டம், சாமளாபுரம் கிராமம் பள்ளபாளையம் ராசவாய்க்கால் மேடு பகுதியில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக அருந்ததியா் சமுதாயத்தைச் சோ்ந்த 30 குடும்பத்தினா் வீடுகள் கட்டி வசித்து வருகிறாம்.

எங்களுக்கு அவ்விடத்தில் அல்லது அருந்ததியா் நந்தம் க.எண்.468 இல் 1பியில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்.

மேலும், பொருளாதார ரீதியில் பின்தங்கிய மக்களுக்கு வீடு கட்டி தர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.