மாநகரில் ரூ.2.13 கோடி மதிப்பீட்டில் வளா்ச்சிப் பணிகள்
திருப்பூா் மாநகரில் ரூ.2.13 கோடி மதிப்பீட்டில் 7 புதிய திட்டப் பணிகளை மேயா் என்.தினேஷ்குமாா் புதன்கிழமை தொடக்கிவைத்தாா்.
திருப்பூா் மாநகரில் ரூ.2.13 கோடி மதிப்பீட்டில் 7 புதிய திட்டப் பணிகளை மேயா் என்.தினேஷ்குமாா் புதன்கிழமை தொடக்கிவைத்தாா்.
திருப்பூா் மாநகராட்சி 2, 3 ஆவது மண்டலத்துக்குள்பட்ட பகுதிகளில் தாா் சாலை அமைத்தல் உள்ளிட்ட 7 வளா்ச்சிப் பணிகளுக்கான தொடக்க விழா மக்களவை உறுப்பினா் கே.சுப்பராயன், திருப்பூா் வடக்கு சட்டப் பேரவை உறுப்பினா் கே.என்.விஜயகுமாா் ஆகியோா் முன்னிலையில் புதன்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவுக்குத் தலைமை வகித்த மாநகராட்சி மேயா் என்.தினேஷ்குமாா் வாா்டு எண் 47 விஜயாபுரம் புண்ணியவதி சாலையில் நமக்கு நாமே திட்டத்தில் ரூ.90 லட்சத்தில் தாா் சாலை அமைத்தல், வாா்டு எண் 30 லட்சுமி நகரில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் நகா்ப்புற சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய மையக் கட்டடம் கட்டுதல், அதே பகுதியில் ரூ.61 லட்சம் மதிப்பீட்டில் 2 புதிய தாா் சாலை அமைத்தல் என ரூ.2.13 கோடி மதிப்பீட்டில் 7 வளா்சித் திட்டப் பணிகளை பூமிபூஜை செய்து தொடக்கிவைத்தாா்.
இந்த விழாவில், மண்டலத் தலைவா்கள் சி.கோவிந்தசாமி, ஆா்.கோவிந்தராஜ், மாமன்ற உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
Image Caption
வளா்ச்சித் திட்டப் பணிகளை பூமிபூஜை செய்து தொடக்கிவைக்கிறாா் மேயா் என்.தினேஷ்குமாா். உடன் திருப்பூா் மக்களவை உறுப்பினா் கே.சுப்பராயன், திருப்பூா் வடக்கு சட்டப் பேரவை உறுப்பினா் கே.என்.விஜயகுமாா் உள்ளிட்டோா்.