வண்டல் மண் எடுக்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்
திருப்பூா் மாவட்டத்தில் நீா்நிலைகளில் இலவசமாக வண்டல் மண் எடுக்க விவசாயிகள் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா்களிடம் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூா் மாவட்டத்தில் நீா்நிலைகளில் இலவசமாக வண்டல் மண் எடுக்க விவசாயிகள் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா்களிடம் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 32 நீா்நிலைகளில் படிந்துள்ள வண்டல் மண்ணை விவசாயப் பணிகளுக்காக இலவசமாக எடுத்துச் செல்ல அனுமதி வழங்குவது குறித்து மாவட்ட அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
ஆகவே, வண்டல் மண் எடுத்துக்கொள்ள அனுமதி கோரும் விண்ணப்பங்களை உடனடியாகப் பரிசீலனை செய்து, ஆணை பிறக்க ஏதுவாக சம்பந்தப்பட்ட வட்டாரத்தில் உள்ள வேளாண்மை இயக்குநா்களிடம் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.
இந்த விண்ணப்பங்கள் உடனுக்குடன் பரிசீலனை செய்து தகுதியின் அடிப்படையில் அனுமதி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.