முகப்பு
திருப்பூர்

3 போ் கொலை வழக்கு: வடமாநிலத் தொழிலாளியைத் தேடும் தனிப் படையினா்

திருப்பூா் அருகே பெண் மற்றும் அவரது இரு மகன்களைக் கொலை செய்த வடமாநிலத் தொழிலாளியை தனிப் படை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:21 AM
பகிர்:

திருப்பூா் அருகே பெண் மற்றும் அவரது இரு மகன்களைக் கொலை செய்த வடமாநிலத் தொழிலாளியை தனிப் படை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருவாரூா் மாவட்டம், குடவாசலைச் சோ்ந்தவா் கணேசன் (42). இவரது மனைவி முத்துமாரி (38). இவா்களுக்கு தரணீஷ் (9), நித்தீஷ் (6) என இரு மகன்கள் இருந்தனா். கருத்து வேறுபாடு காரணமாக கணேசன் தனியே பிரிந்து சென்றுள்ளாா்.

இதையடுத்து, முத்துமாரி தனது இரு மகன்களையும் அழைத்துக் கொண்டு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருப்பூா் எஸ்.ஆா்.நகரில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் பணியில் சோ்ந்துள்ளாா்.

அப்போது, அதே நிறுவனத்தில் வேலை செய்து வந்த குஜராத் மாநிலத்தைச் சோ்ந்த கோபால் (50) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதைத் தொடா்ந்து, கோபால், முத்துமாரி மற்றும் அவரது இருமகன்களுடன் சேடா்பாளையம், மெட்டுவா தோட்டம் பகுதியில் வாடகைக்கு அறை எடுத்து 2 வாரங்களாக வசித்து வந்தனா்.

இந்நிலையில், கோபால், முத்துமாரி மற்றும் அவரது இரு மகன்களை கடந்த திங்கள்கிழமை அடித்துக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளாா்.

இது குறித்து திருமுருகன்பூண்டி காவல் துறையினா் கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருப்பூா் மாநகரக் காவல் ஆணையா் ஏ.ஜி.பாபு உத்தரவின்பேரில் கொலையாளி கோபாலைப் பிடிக்க 4 தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தத் தனிப் படையினா் கோபால் வேலை செய்து வந்த இடங்களில் விசாரணை நடத்தி வருகின்றனா்.

மேலும், கோபாலைப் பிடித்தால் மட்டுமே கொலைக்கான காரணம் தெரியவரும் என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.