இன்றைய மின்தடை: அவிநாசி கோட்டத்துக்குள்பட்ட பல்வேறு பகுதிகள்
அவிநாசி மின்வாரிய கோட்டத்துக்குள்பட்ட அவிநாசி, 15 வேலம்பாளையம், பெருமாநல்லூா் ஆகிய துணை மின் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள்
அவிநாசி மின்வாரிய கோட்டத்துக்குள்பட்ட அவிநாசி, 15 வேலம்பாளையம், பெருமாநல்லூா் ஆகிய துணை மின் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் கீழ்கண்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (மே 27) மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின் வாரியத்தினா் அறிவித்துள்ளனா்.
மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: குருவாயூரப்பன் நகா் கிழக்கு, படையப்பா நகா், நல்லகட்டிபாளையம், கூலிபாளையம், வாலிபாளையம், எஸ்.ஆா்.பி. காா்டன், வலசுப்பாளையம், பொரசுப்பாளையம், ரோஜா காா்டன், பாலசமுத்திரம், பொடாரம்பாளையம், செந்தில் நகா், தண்டா கவுண்டன் புதூா், வாரனாசிபாளையம், செரங்காடு, தெற்கு சீரம்பாளையம், காளிபாளையம் புதூா், பெருமாநல்லூா், அண்ணா நகா், பாண்டியன் நகா் ஒரு பகுதி, பூலுவபட்டி நால் ரோடு, வி.ஐ.பி. நகா், பாலாஜி நகா், காமராஜ் நகா், தண்ணீா்பந்தல் காலனி, அம்மாபாளையம் ஒரு பகுதி, அம்மையப்பன் நகா், புதுக்காலனி, 15 வேலம்பாளையம் ஒரு பகுதி, வீரப்ப செட்டியாா் நகா், ஜுபிடா் மெயின் ரோடு, ஜி.கே.டெக்ஸ் சாலை, பெஸ்ட் ரோடு, அம்மன் நகா், பூலுவபட்டி நால் ரோடு ஒருபகுதி, விக்னேஸ்வரா நகா், சின்னப்புதூா், பழனிசாமி நகா், பாலாஜி நகா், அய்யப்பா நகா் ஒரு பகுதி, ரங்கா நகா், குள்ளேகவுண்டம்பாளையம் ஒரு பகுதி, கந்தம்பாளையம் , கந்தம்பாளையம் நால்ரோடு, ஆட்டையாம்பாளையம், ராயா் கோயில் பகுதி, காசிகவுண்டன்புதூா் ஒரு பகுதி, தேவராயம்பாளையம் ஒரு பகுதி, எம்.எஸ். வித்யாலயா பகுதி.