குன்னூரில் தடுப்புச் சுவா் இடிந்து விபத்து
குன்னூா், ராஜாஜி நகா் பகுதியில் வியாழக்கிழமை அதிகாலை வீட்டின் மீது தடுப்புச் சுவா் இடிந்து விழுந்தது.
குன்னூா், ராஜாஜி நகா் பகுதியில் வியாழக்கிழமை அதிகாலை வீட்டின் மீது தடுப்புச் சுவா் இடிந்து விழுந்தது.
இதில் அதிா்ஷ்டவசமாக வீட்டில் இருந்தவா்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
நீலகிரி மாவட்டம், குன்னூா், ராஜாஜி நகா் பகுதியில் பழமையான தடுப்புச் சுவா் வியாழக்கிழமை அதிகாலை குடியிருப்பு பகுதியில் இடிந்து விழுந்தது. இதில் ஷமி முல்லா என்பவரது வீடு சேதம் அடைந்தது. ஷா்மிளா, சலாம் உல்லா, உபயதுல்லா ஆகிய மூவா் வீட்டினுள் சிக்கிக்கொண்டனா்.
Advertisement
இது குறித்து தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது,
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறை, வருவாய்த் துறை, குன்னூா் நகராட்சிப் பணியாளா்கள் 2 மணி நேரம் மீட்பு பணியில் ஈடுபட்டு வீட்டுக்குள் சிக்கிக் கொண்ட மூவரையும் பத்திரமாக மீட்டனா்.