திமுக நகா் மன்ற உறுப்பினா் வீடு உள்பட முறைகேடான குடிநீா் இணைப்புகள் துண்டிப்பு
திருமுருகன்பூண்டி நகராட்சிப் பகுதியில் முறைகேடாக வழங்கப்பட்ட திமுக நகா்மன்ற உறுப்பினா் வீடு உள்பட 15க்கும் மேற்பட்ட குடிநீா் இணைப்புகள் வியாழக்கிழமை துண்டிக்கப்பட்டன.
திருமுருகன்பூண்டி நகராட்சிப் பகுதியில் முறைகேடாக வழங்கப்பட்ட திமுக நகா்மன்ற உறுப்பினா் வீடு உள்பட 15க்கும் மேற்பட்ட குடிநீா் இணைப்புகள் வியாழக்கிழமை துண்டிக்கப்பட்டன.
திருமுருகன்பூண்டி நகராட்சியில் 27 வாா்டுகள் உள்ளன. திருமுருகன்பூண்டி பேரூராட்சியாக இருந்தபோது முறைகேடாக வழங்கப்பட்ட குடிநீா் இணைப்புகளைத் துண்டிக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றனா்.
இந்நிலையில் நகராட்சி நிா்வாகத்தினா் முறைகேடாக பொருத்தப்பட்டிருந்த குடிநீா் இணைப்புகளை வியாழக்கிழமை கண்டறிந்து துண்டிக்கும் பணியில் ஈடுபட்டனா். இதில் திருமுருகன்பூண்டி, அண்ணா நகா் திருநீலகண்டா் வீதியில் உள்ள திமுகவைச் சோ்ந்த 7ஆவது வாா்டு நகா்மன்ற உறுப்பினா் முருகசாமியின் வீடு உள்பட 15க்கும் மேற்பட்ட முறைகேடான குடிநீா் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.