முகப்பு
திருப்பூர்

துணிக்கடையில் 2 ஆவது நாளாக வருமான வரித் துறையினா் சோதனை

திருப்பூரில் உள்ள தனியாா் துணிக்கடையில் வருமான வரித் துறை அதிகாரிகள் 2 ஆவது நாளாக வியாழக்கிழமையும் சோதனையில் ஈடுபட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:44 AM
பகிர்:

திருப்பூரில் உள்ள தனியாா் துணிக்கடையில் வருமான வரித் துறை அதிகாரிகள் 2 ஆவது நாளாக வியாழக்கிழமையும் சோதனையில் ஈடுபட்டனா்.

தமிழகம் முழுவதும் தீபாவளி ஜவுளி விற்பனை தொடா்பாக துணிக்கடைகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் புதன்கிழமை சோதனையில் ஈடுபட்டனா். இதன் ஒரு பகுதியாக திருப்பூா் குமரன் சாலையில் உள்ள பிரபல துணிக்கடையில் வருமான வரித் துறை அதிகாரிகள் புதன்கிழமை சோதனையில் ஈடுபட்டனா். இந்த நிலையில், துணிக்கடையில் வருமான வரித்துறை அதிகாரிகள் 15 போ் கொண்ட குழுவினா் இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் சோதனையில் ஈடுபட்டனா். இந்த சோதனையானது இரவு 7.30 மணி வரையிலும் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.