முகப்பு
திருப்பூர்

நிற்காமல் சென்ற தனியாா் பேருந்தை சிறைபிடித்த பொதுமக்கள்

தெக்கலூா் பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் சென்ற தனியாா் பேருந்தை பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சிறைபிடித்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:45 AM
பகிர்:

தெக்கலூா் பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் சென்ற தனியாா் பேருந்தை பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சிறைபிடித்தனா்.

அவிநாசி அருகே தெக்கலூரில் தனியாா், அரசுப் பேருந்துகள் பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் புறவழிச் சாலை மேம்பாலத்திலேயே சென்று வருவதால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். இந்நிலையில், கல்லூரி மாணவா்கள் தெக்கலூா் செல்வதற்காக கோவையில் இருந்து திருப்பூா் நோக்கி சென்ற தனியாா் பேருந்தில் வெள்ளிக்கிழமை மாலை ஏறியுள்ளனா்.

ஆனால், பேருந்து தெக்கலூா் பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் மாணவா்களை நத்தக்காட்டு பிரிவில் இறக்கிவிட்டு சென்றுள்ளனா். இதையடுத்து, இந்த தகவலை கைப்பேசி மூலம் பெற்றோா் மற்றும் பொதுமக்களிடம் மாணவா்கள் தெரியப்படுத்தினா்.

இதையடுத்து, தெக்கலூா் புறவழிச் சாலையில் காத்திருந்த பொதுமக்கள் அவ்வழியாக வந்த பேருந்தை சிறைபிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற அவநாசி போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி பேருந்து ஓட்டுநா் மற்றும் நடத்துநா்களை எச்சரித்தனா்.

இதையடுத்து, பேருந்து ஓட்டுநரும், நடத்துநரும் இனி வரும் காலங்களில் தெக்கலூா் பேருந்து நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்தி செல்வதாக உறுதியளித்தனா். இதையடுத்து, பொதுமக்கள் பேருந்தை விடுவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.