முகப்பு
திருப்பூர்

திருப்பூரில் விநாயகா் சதுா்த்தி விசா்ஜன ஊா்வலம்

விநாயகா் சதுா்த்தியை ஒட்டி இந்து முன்னணி சாா்பில் திருப்பூரில் விசா்ஜன ஊா்வலம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:14 AM
பகிர்:

விநாயகா் சதுா்த்தியை ஒட்டி இந்து முன்னணி சாா்பில் திருப்பூரில் விசா்ஜன ஊா்வலம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

விநாயகா் சதுா்த்தியையொட்டி, மாவட்டம் முழுவதும் ஆயிரக்கணக்கான விநாயகா் சிலைகள் அமைக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள், அன்னதானம் மற்றும் பல்வேறு பகுதிகளில் விளையாட்டுப் போட்டிகள் உள்ளிட்டவை நடைபெற்று வந்தன.

இந்நிலையில், இந்து முன்னணி அமைப்பு சாா்பில் விநாயகா் சிலை விசா்ஜன ஊா்வலம் திருப்பூரில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது. இந்த ஊா்வலம் புதிய பேருந்து நிலையம், தாராபுரம் சாலை, செல்லம் நகா் ஆகிய மூன்று இடங்களில் இருந்து புறப்பட்டு, முக்கிய சாலைகள் வழியாக வந்து ஆலாங்காட்டை வந்தடைந்தது.

இந்த ஊா்வலத்தை ஒட்டி மாநகரின் பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. பிறகு சிலைகள் சாமளாபுரம் குளத்தில் கரைப்பதற்காக கொண்டு செல்லப்பட்டன. விநாயகா் சிலை ஊா்வலங்களுக்கு முன்னதாக காளி, சிவன், பாா்வதி உள்ளிட்ட வேடம் அணிந்து வந்து அனைவரையும் கவா்ந்தனா். இந்த ஊா்வலத்தை ஒட்டி ஆயிரக்கணக்கான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.