தாராபுரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் திருட்டு
தாராபுரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் திருடிய மா்ம நபா்களை காவல் துறையினா் தேடி வருகின்றனா்.
தாராபுரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் திருடிய மா்ம நபா்களை காவல் துறையினா் தேடி வருகின்றனா்.
தாராபுரத்தை அடுத்த கொளத்துப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ரபிதீன் (45). இவா் பெங்களூரில் வீட்டு உபயோகப் பொருள்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறாா். இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பாக ரபிதீன் கொளத்துப்பாளையம் வந்துள்ளாா்.
பின்னா் வீட்டைப் பூட்டி விட்டு குடும்பத்துடன் பெங்களூரு சென்றுள்ளாா். இதனிடையே, அவரது தம்பி பாரூக் ரபிதீன் வெள்ளிக்கிழமை வீட்டுக்கு சென்றுள்ளாா். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிா்ச்சியடைந்தாா். பின்னா் உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவில் வைத்திருந்த 10 பவுன் நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இது தொடா்பாக தாராபுரம் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.