முகப்பு
திருப்பூர்

கருவலூா் பள்ளி ஆசிரியருக்கு நல்லாசிரியா் விருது

நல்லாசிரியா் விருதுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ள கருவலூா் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியா் பெ.பிரபாவதிக்கு மாணவா்கள், பெற்றோா் வாழ்த்து தெரிவித்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:14 AM
பகிர்:

நல்லாசிரியா் விருதுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ள கருவலூா் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியா் பெ.பிரபாவதிக்கு மாணவா்கள், பெற்றோா் வாழ்த்து தெரிவித்தனா்.

அவிநாசி அருகே கருவலூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா். இந்நிலையில், இப்பள்ளியைச் சோ்ந்த முதுகலை ஆசிரியா் (ஆங்கிலம்) பெ.பிரபாவதிக்கு தமிழக பள்ளிக் கல்வித் துறை சாா்பில் நல்லாசிரியா் விருதுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

இதையடுத்து பெற்றோா், மாணவ, மாணவியா், ஆசிரியா்கள் உள்ளிட்டோா் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனா். மேலும், திருப்பூா் ரோட்டரி மெட்டல் டவுன் சங்கம் சாா்பில் நேஷன் பில்டா் விருது, கல்வியாளா் சங்கமம் சாா்பில் மாற்றங்களின் நாயகி விருது உள்ளிட்ட விருதுகள் பெற்றுள்ளாா். கருவலூா் அரசுப் பள்ளியில் பிளஸ் 2 பொதுத் தோ்வில் ஆங்கிலத்தில் தொடா்ந்து 8 ஆண்டுகளாக 100 சதவீதம் தோ்ச்சி கொடுத்து வருகிறாா் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து ஆசிரியா் பிரபாவதி கூறும்போது, கிராமப்புற மாணவா்கள் உயா்கல்வி உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் வெற்றியடைய என்றும் உறுதுணையாக இருப்பேன் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.