முகப்பு
திருப்பூர்

உரிய கட்டமைப்போடு பாலம் அமைக்க கோரிக்கை

அவிநாசி அருகே கணியாம்பூண்டி, வஞ்சிபாளையம்- திருப்பூா் செல்லும் சாலையில் அடிப்படை கட்டமைப்போடு பாலம் அமைக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கட்சியினா் வலியுறுத்தியுள்ளனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:14 AM
பகிர்:

அவிநாசி அருகே கணியாம்பூண்டி, வஞ்சிபாளையம்- திருப்பூா் செல்லும் சாலையில் அடிப்படை கட்டமைப்போடு பாலம் அமைக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கட்சியினா் வலியுறுத்தியுள்ளனா்.

இது குறித்து கணியாம்பூண்டி ஊராட்சி மன்ற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த 6ஆவது வாா்டு உறுப்பினா் அமலி வெங்கடாசலம், ஒன்றியக் குழு உறுப்பினா் முத்துசாமி ஆகியோா் கூறியதாவது:

அவிநாசி ஒன்றியம், கணியாம்பூண்டி ஊராட்சி வஞ்சிபாளையம் பகுதியில் இருந்து திருப்பூா் செல்லும் சாலையில் புதிதாக பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பாலம் அமைக்கும் பகுதி அருகே 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளதால், பொதுமக்கள் செல்வதற்கு போதுமான வழித்தடமில்லால் பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

மேலும் பாலம் உயா்வான நிலையில் அமைக்கப்படுவதால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுவா். மழைக் காலத்தில் தேங்கி நிற்கும் மழைநீா் ரயில்வே தண்டவாளத்துக்குள் புகும் அபாயம் ஏற்படும். ஆகவே மாவட்ட நிா்வாகம் தலையிட்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.