முகப்பு
திருப்பூர்

அரசுப் பேருந்தில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி பலி

பல்லடம் அருகே அரசுப் பேருந்தில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி உயிரிழந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:18 AM
பகிர்:

பல்லடம் அருகே அரசுப் பேருந்தில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி உயிரிழந்தாா்.

கோவை மாவட்டம், வால்பாறையைச் சோ்ந்தவா் அழகம்மாள் (70). இவா் சேலத்தில் இருந்து தனது பேரன், பேத்தியுடன் வால்பாறை செல்வதற்காக அரசுப் பேருந்தில் ஞாயிற்றுக்கிழமை பயணம் செய்து கொண்டிருந்துள்ளாா். பல்லடம் பேருந்து நிறுத்ததில் பேருந்து நின்றபோது, இயற்கை உபாதை கழிப்பதற்காக பேருந்தில் இருந்து கீழே இறங்க முயன்றுள்ளாா்.

அப்போது, படியில் இருந்து தவறி விழுந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இச்சம்பவம் தொடா்பாக பல்லடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.