அவிநாசி அருகே செம்பியநல்லூர் நேரு நகரில் அனுமதியின்றி செயல்படும் மத வழிபாட்டுக்கூடத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் ஞாயிற்றுக் கிழமை வீடுகளில் கருப்புக் கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது-திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே செம்பியநல்லூர் ஊராட்சி நேருநகரில் 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் 200க்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறோம். இந்நிலையில் இக்குடியிருப்பு பகுதியில் அனுமதியின்றி மத வழிபாட்டுக்கூடம் நடத்தி வருகின்றனர். மேலும் வெளியூர்களில் இருந்தும் பலரும் வாரந்தோறும் இங்கு ஒன்றுகூடி வழிபாடு நடத்தி பொதுமக்களுக்கு அச்சுறுத்தலும், இடையூறும் ஏற்படுத்தி வருகின்றனர்.
மேலும் மற்ற ஊர்களில் இறந்தவர்களின் உடல்களை இங்கு கொண்டு வந்து வழிபாடு செய்து எடுத்து செல்கின்றனர். குறிப்பாக இங்குள்ள பெண்களை தகாத வார்த்தைகளால் பேசுகின்றனர். ஆகவே அனுமதியின்றி செயல்படும் மத வழிபாட்டுக்கூடத்திற்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும் என்றனர். மேலும் தொடர்ந்தால், போராட்டங்களை தொடர்வோம் என்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.