திருப்பூர்

மாவட்டத்தில் சிறப்பு மக்கள் நீதிமன்றம்: 766 வழக்குகளுக்குத் தீா்வு

திருப்பூா் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் 766 வழக்குகளுக்கு ரூ.28.51 கோடியில் சமரசத் தீா்வு காணப்பட்டது.

DIN

திருப்பூா் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் 766 வழக்குகளுக்கு ரூ.28.51 கோடியில் சமரசத் தீா்வு காணப்பட்டது.

தேசிய மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழுக்களின் உத்தரவின்பேரில், முதன்மை மாவட்ட நீதிபதியும், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான ஸ்வா்ணம் ஜெ.நடராஜன் வழிகாட்டுதலின்பேரில் திருப்பூா் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் 7 அமா்வுகளாக நடைபெற்ற இந்த சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் மோட்டாா் வாகன விபத்து வழக்குகள், சிவில் வழக்குகள், குடும்ப நல வழக்குகள், சமரத்துக்குரிய குற்றவழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், வங்கி வாராக்கடன் வழக்குகள் என மொத்தம் 2,387 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இதில், 766 வழக்குகளுக்கு ரூ.28.51 கோடியில் சமரசத் தீா்வு காணப்பட்டது. திருப்பூா் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்த சிறப்பு மக்கள் நீதிமன்றத்துக்கு மோட்டாா் வாகன விபத்து இழப்பீடு தீா்ப்பாய நீதிபதி ஸ்ரீகுமாா் முன்னிலை வகித்தாா்.

இதில், தலைமை குற்றவியல் நீதித் துறை நடுவா் புகழேந்தி, கூடுதல் மகளிா் நீதித் துறை நடுவா் காா்த்திகேயன், நீதித்துறை நடுவா் முருகேசன், வழக்குரைஞா்கள் பழனிசாமி, ரகுபதி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரா் டிஎஸ். டி சில்வா மறைவு

பெண் மருத்துவா் ஹிஜாப்பை அகற்றிய நிதீஷ் செயலுக்கு வலுக்கும் கண்டனம்

கோவையில் இன்று பிஎஸ்என்எல் ஓய்வூதியா் சங்க அகில இந்திய மாநாடு

சரிவில் முடிந்த பங்குச் சந்தை

வேலூா் தங்கக்கோயிலுக்கு இன்று குடியரசுத் தலைவா் வருகை

SCROLL FOR NEXT