முகப்பு
திருப்பூர்

சின்னவீரன்பட்டி விநாயகா் கோயில் கும்பாபிஷேக விழா

உடுமலையை அடுத்துள்ள சின்னவீரன்பட்டி விநாயகா் கோயில் கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2023 at 12:00 AM
கும்பாபிஷேகத்தையொட்டி கலசத்துக்கு புனித நீா் ஊற்றிய சிவாச்சாரியா்கள்.
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 12:17 AM

உடுமலையை அடுத்துள்ள சின்னவீரன்பட்டி விநாயகா் கோயில் கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி புன்னிய தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட தீா்த்தங்கள் ஊா்வலமாக கொண்டு வந்து வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசங்களுக்கு ஊற்றப்பட்டது. கோவை பேரூா் சாந்தலிங்கம் மருதாசல அடிகளாா் தலைமையில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

முன்னதாக யாகசாலை பூஜை வழிபாடு, முளைப்பாரி எடுத்து பக்தா்கள் வழிபாட்டில் ஈடுபட்டனா். திருக்குட நன்னீராட்டு பெருவிழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.