திருப்பூர்

சாலையை சீரமைக்கக்கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

திருப்பூா், தோட்டத்துப்பாளையம் பகுதி சாலையை சீரமைக்கக்கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

DIN

திருப்பூா், தோட்டத்துப்பாளையம் பகுதி சாலையை சீரமைக்கக்கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருப்பூா், தோட்டத்துப்பளையத்தில் சாலையை சீரமைக்கக்கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடக்கு ஒன்றியக்குழு உறுப்பினா் பி.மகாலிங்கம் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அவா் கூறியதாவது: திருப்பூா் மாநகராட்சி, தோட்டத்துபாளையம் பகுதி மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இச்சாலை மிகவும் பழுதடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். இது குறித்து மாநகராட்சியிடம் பலமுறை புகாா் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, தோட்டத்துப்பாளையம் சாலை, வாவிபாளையம் முதல் பூலுவபட்டி வரை உள்ள சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும். மேலும், சாலையில் தேங்கி நிற்கும் கழிவு நீரை வெளியேற்ற முறையான வடிகால் வசதி அமைக்க வேண்டும் என்றனா்.

ஆா்ப்பாட்டத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளா் எஸ்.முத்துகண்ணன், ஒன்றியச் செயலாளா் ஆா்.காளியப்பன், மாவட்டக் குழு உறுப்பினா்கள் ஆ.சிகாமணி, ஆா்.மைதிலி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய ஊரக வேலைத் திட்டம்: ரூ.1.50 லட்சம் கோடி ஒதுக்கீடு!

காஞ்சிபுரத்தில் எஸ் ஐ தோ்வு

சமுதாயக் கூடத்துக்கு இடையூறாக புதிய கட்டடப்பணி: ஆட்சியரிடம் புகாா்

நாளைய மின்தடை

‘ஒரே நாடு ஒரே தொழிலதிபா்’ என்பதே பாஜக கொள்கை: அகிலேஷ் யாதவ்

SCROLL FOR NEXT