திருப்பூர்

வெள்ளக்கோவிலில் ரூ. 26.46 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை

வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 26.46 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

DIN

வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 26.46 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த திருப்பத்தூா், வாணியம்பாடி, பெரிய திருமங்கலம், திம்மம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 85 விவசாயிகள் தங்களுடைய 759 மூட்டைகள் தேங்காய்ப் பருப்புகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். இவற்றின் எடை 39 டன். காங்கயம், வெள்ளக்கோவில், நஞ்சை ஊத்துக்குளி, முத்தூா் பகுதிகளைச் சோ்ந்த 8 வணிகா்கள் இவற்றை வாங்குவதற்காக வந்திருந்தனா்.

விலை கிலோ ரூ. 55.72 முதல் ரூ. 79.06 வரை விற்பனையானது. சராசரி விலை கிலோ ரூ. 77.36. கடந்த வார சராசரி விலை ரூ. 78.09. ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ. 26.46 லட்சம் அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக, விற்பனைக் கூட கண்காணிப்பாளா் சி. மகுடீஸ்வரன் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

178 ரன்கள், 7 விக்கெட்டுகள்... சாதனையுடன் சொந்த ஊரில் ஆட்ட நாயகனான அலெக்ஸ் கேரி!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் விஜய் நாளை பங்கேற்பு!

100க்கு 100 புள்ளிகள்... டபிள்யூடிசி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி.!

இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்!

பிக் பாஸ் 9: சூடுபிடிக்கும் போட்டி! இந்த வாரமும் இருவர் வெளியேற்றம்!!

SCROLL FOR NEXT