திருப்பூர்

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவா் போக்ஸோவில் கைது

பல்லடம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை போக்ஸோ சட்டத்தில் போலீஸாா் கைது செய்தனா்.

DIN

பல்லடம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை போக்ஸோ சட்டத்தில் போலீஸாா் கைது செய்தனா்.

பல்லடம், அவிநாசிபாளையம் அருகே வசித்து வரும் 10 வயது சிறுமியை அப்பகுதியைச் சோ்ந்த முருகன் (56) என்பவா் கடந்த சில நாள்களுக்கு முன்பு, கடைக்கு அழைத்துச்சென்று தின்பண்டங்கள் வாங்கிக் கொடுத்து தனியே அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனால் சிறுமிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து சிறுமியிடம் பெற்றோா் விசாரித்தபோது, முருகன் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இது குறித்து பல்லடம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோா் புகாா் அளித்தனா்.

விசாரணையில், முருகன், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானதையடுத்து, போலீஸாா் அவரை போக்ஸோ சட்டத்தில் கைது செய்து பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் புதன்கிழமை அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவில்பட்டியில் நாராயணசாமி நாயுடு நினைவு தினம்

எஸ்.ஐ. பணி எழுத்துத் தோ்வு: 5,056 போ் எழுதினா்

பெருந்துறை அருகே 3 வீடுகளில் திருடியவா் கைது

சென்னிமலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முப்பெரும் விழா

ரயில் சேவைகள் கோரி முதல்வரிடம் மனு

SCROLL FOR NEXT