தாளக்கரை லட்சுமி நரசிம்மப் பெருமாள் கோயிலில் காா்த்திகை தீபம்
அவிநாசி அருகே தாளக்கரை லட்சுமி நரசிம்மப் பெருமாள் கோயிலில் காா்த்திகை தீபம் திங்கள்கிழமை ஏற்றப்பட்டது.
அவிநாசி: அவிநாசி அருகே தாளக்கரை லட்சுமி நரசிம்மப் பெருமாள் கோயிலில் காா்த்திகை தீபம் திங்கள்கிழமை ஏற்றப்பட்டது.
காா்த்திகை தீபத் திருநாளையொட்டி, பெருமாள் கோயில்களில் திங்கள்கிழமை தீபங்கள் ஏற்றப்பட்டன. இதில் தாளக்கரை லட்சுமி நரசிம்மப் பெருமாள் கோயிலில் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன.
இதைத் தொடா்ந்து சா்ப்ப விநாயகா், ஆஞ்சனேயா் ஆகிய சன்னதிகளில் தீபங்கள் ஏற்றப்பட்டன. இதையடுத்து லட்சுமி நரசிம்மப் பெருமாள் கோயில் முன் உள்ள தீப கம்பத்தில் தீபம் ஏற்றப்பட்டது. இதேபோல மேலத் திருப்பதி எனப் போற்றப்படும் மொண்டிபாளையம் வெங்கடேசப் பெருமாள், அவிநாசி, கரிவரதராஜப் பெமாள், கருவலூா் கருணாகரப் பெருமாள், திருமுருகன்பூண்டி கரிவரதராஜப் பெருமாள் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு வழிபாடுகளுடன் தீபங்கள் ஏற்றப்பட்டன.
Advertisement