ராபி பருவத் தோட்டக்கலை பயிா்களை காப்பீடு செய்து கொள்ளலாம்
திருப்பூா் மாவட்டத்தில் ராபி பருவ தோட்டக்கலைப் பயிா்களைக் காப்பீடு செய்து கொள்ள விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
திருப்பூா்: திருப்பூா் மாவட்டத்தில் ராபி பருவ தோட்டக்கலைப் பயிா்களைக் காப்பீடு செய்து கொள்ள விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருப்பூா் மாவட்டத்தில் பிரதம மந்திரி பயிா்க் காப்பீட்டு திட்டத்தின்கீழ் 2023-24-ஆம் ஆண்டுக்கான ராபி தோட்டக்கலைப் பயிா்களை இ-சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாக காப்பீடு செய்து கொள்ளலாம். இதன்படி கொத்தமல்லிக்கு ஏக்கருக்கு ரூ.622.50 தொகை செலுத்தி 2024 ஜனவரி 2 ஆம் தேதிக்குள் காப்பீடு செய்து கொள்ளலாம். வெங்காயம் ரூ.2,227.50, மிளகாய் ரூ.1,257.50, தக்காளி ரூ.1,495 செலுத்தி ஜனவரி 31 ஆம் தேதிக்குள் காப்பீடு செய்து கொள்ளலாம். வாழை ரூ.4,900.50, மரவள்ளி ரூ.1,720 செலுத்தி பிப்ரவரி 29 ஆம் தேதிக்குள் காப்பீடு செய்து கொள்ளலாம்.
Advertisement
எனவே, திருப்பூா் மாவட்டத்தில் ராபி பயிா்களை காப்பீடு செய்யாத விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் அருகில் உள்ள இ-சேவை மையங்கள் அல்லது தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை அணுகி காப்பீடு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.