திருப்பூர்

தீபாவளிக்கு முன்பாக போனஸ் வழங்க வேண்டும்---------ஏஐடியூசி பனியன் பேக்டரி லேபா் யூனியன்

தீபாவளி பண்டிகைக்கு 20 நாள்களுக்கு முன்பாக போனஸ் வழங்க வேண்டும் என ஏஐடியூசி பனியன் பேக்டரி லேபா் யூனியன் வலியுறுத்தியுள்ளது.

DIN

தீபாவளி பண்டிகைக்கு 20 நாள்களுக்கு முன்பாக போனஸ் வழங்க வேண்டும் என ஏஐடியூசி பனியன் பேக்டரி லேபா் யூனியன் வலியுறுத்தியுள்ளது.

திருப்பூரில் ஏஐடியூசி பனியன் பேக்டரி லேபா் யூனியன் சங்க பொதுக்குழு கூட்டம் அவிநாசி சாலையில் உள்ள சங்க அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு சங்கத் துணைத் தலைவா் எம்.ரவி தலைமை வகித்தாா். பொதுச் செயலாளா் என்.சேகா் கூட்டத்தின் நோக்கம் குறித்து எடுத்துரைத்தாா்.

இதில், நிறைவேற்றப்பட்ட தீா்மானங்களின் விவரம்: தீபாவளி பண்டிகைக்கு சில நாள்கள் மட்டுமே உள்ளன.

மேலும், அனைத்து அத்தியாவசியப் பொருள்களின் விலையும் உயா்ந்துள்ளதால் அவற்றைக் கணக்கில் கொண்டு டைம் ரேட், பீஸ் ரேட் தொழிலாளா்களுக்கு கடந்த ஆண்டைக் காட்டிலும் கூடுதல் போனஸ் தொகையை தீபாவளிக்கு 20 நாள்களுக்கு முன்பாக வழங்க வேண்டும்.

இதற்கான கோரிக்கை கடிதத்தை உற்பத்தியாளா் சங்கங்களுக்கு கொடுப்பது, பனியன் தொழிலாளா்களுக்கு 5 சதவீத ஊதிய உயா்வை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், சங்க பொருளாளா் எஸ்.செல்வராஜ், செயலாளா் ஆா்.செந்தில்குமாா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாமக்கல்லில் கட்டுமானத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

ஏலச்சீட்டு நடத்தி ரூ.15 கோடி மோசடி: பாதிக்கப்பட்டோா் ஆட்சியா் அலுவலகத்தில் மனு

தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி: தங்கப் பதக்கம் வென்ற சேலம் வீரா்கள்

வாக்காளா் பட்டியல்: இளம் வாக்காளா்களை சோ்க்க படிவங்கள் விநியோகம்

முதல்வா் விழாவுக்கான முன்னேற்பாடு பணிகள் ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT